18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை நகரில் பெருகி வரும் சுகாதார சீர்கேடு: கண்டு கொள்ளுமா மாநகராட்சி

மதுரை நகரில் பெருகி வரும் சுகாதார சீர்கேடு: கண்டு கொள்ளுமா மாநகராட்சி

எழுதியவர்: mohan November 16, 2021, 6:39 pm

மதுரை 30-வது வார்டு, சௌபாக்யா விநாயகர் கோயில் தெரு, சாக்கடை நீரால், இப் பகுதி மக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.மதுரை மேலமடை, வண்டியூர், கண்ணேந்தல், திருப்பாலை ஆகிய பகுதிகள் பல ஆண்டுகளாக ஊராட்சி மன்ற கட்டுப்பாட்டில் இருந்தது.மாநகராட்சி பகுதிகள் விரிவாக்கம் செய்யூம்போது, மேலமடை, வண்டியூர் ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டும், எந்த வித அடிப்படை பணிகளும் நடைபெறவில்லையென, கனகபாண்டியன் தெரிவித்தார்.

மேலும், மழைகாலங்களில், கழிவுநீர் கால்வாயில் பெருக்கெடுக்கும் நீரானது சாலைகளில் பரவி தெருக்களை மாசுபடுத்துகிறதாம்.ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம், இப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது, இப் பகுதி குடியிருப்போர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.அண்ணாநகர் யாணைக்குழாய், வீரவாஞ்சி தெரு, மருதுபாண்டியர் தெருக்களில், குப்பகளை கொட்ட பெரிய அளவில், தொட்டிகள் அமைத்து, சாலையில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதியில் தாழை வீதி குளம் போல காட்சியளிக்கிறது.உடனடியாக, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு, இப் பிரச்ணைகளை தீர்க்க பொது மக்கள் கோரியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!