17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி கல்லூரிகளில் CCTV கேமரா அமைக்க வேண்டும்;மமகவினர் நெல்லை கலெக்டரிடம் கோரிக்கை..

பள்ளி கல்லூரிகளில் CCTV கேமரா அமைக்க வேண்டும்;மமகவினர் நெல்லை கலெக்டரிடம் கோரிக்கை..

எழுதியவர்: mohan November 16, 2021, 10:46 am

பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுக்கும் பொருட்டு பள்ளி கல்லூரிகளில் CCTV கேமரா அமைக்க வேண்டும் என மமக சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை தமுமுக மமக மாவட்ட துணைத் தலைவர் AM மைதின் பாதுஷா தலைமையில் திரண்டு வந்து மமகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அப்போது மனிதநேய மக்கள் கட்சி துணைச் செயலாளர் அ.காஜா,ஊடக அணி செயலாளர் செய்யது,IPP துணை செயலாளர் ரபீக்,மேலப்பாளையம் வடக்கு பகுதி தமுமுக மமக தலைவர் குதா, பகுதி செயலாளர் அஜீஸ்,38- வது வார்டு நிர்வாகி ராஹத் செய்யதலி ஆகியோர் உடனிருந்தனர். அந்த மனுவில் “சமீப காலங்களாக பள்ளி,கல்லூரிகளில் மாணவியர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதும், அதன் காரணமாக தற்கொலை முடிவுகள் ஏற்படுதால் அதனை தடுக்கும் பொருட்டு அனைத்து பள்ளி,கல்லூரிகளின் அனைத்து வகுப்பறைகளிலும் CCTV கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும். ஒழுக்கத்திற்கு மாற்றமாக உள்ள மாணவியரின் குட்டை பாவாடைகள் தடை செய்யப்பட வேண்டும். அனைத்து பள்ளி கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்படும் மாணவியர்கள் அதிகாரிகளை விரைவில் தொடர்பு கொள்ள ஏதுவாக மாவட்ட ஆட்சியர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஆகியோரின் தொடர்பு எண்கள் வைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!