17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..

எழுதியவர்: mohan November 16, 2021, 10:42 am

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.இதில் 364 மனுக்கள் பெறப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலரை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தலைமையில் 15.11.2021 திங்கள் கிழமை நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனி நபர் கடன், விதவை உதவித்தொகை தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 364 மனுக்கள் பெறப்பட்டது. இந்த கூட்டத்தில், பெறப்பட்ட மனுக்களை தகுதி வாய்ந்த மனுக்களா என்பதை விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதிலளிக்குமாறுசம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!