18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குழந்தைகளுக்கு ஊக்கமும் உணவும் வழங்கிய மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

குழந்தைகளுக்கு ஊக்கமும் உணவும் வழங்கிய மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

எழுதியவர்: mohan November 15, 2021, 1:25 pm

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஜோஆண்ட்ரியோ குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.தங்களது திறமைகளை ஆடல், பாடல், பேச்சு ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.அனைவருக்கும் அறக்கட்டளை சார்பில் சிறப்பு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார்,சமூக ஆர்வலர்கள் அசோக்குமார், பெரியதுரை, சந்திரலேகா, ஜெயந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று களப்பணியில் ஈடுபட்டனர்.ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இல்லத்தின் அலுவலர் சாந்தி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!