மதுரை திருமங்கலம் தாலுக்கா கீழ உரப்பனூர் அருகே உள்ள சமுதாயக்கூடம் பின்புறத்தில் அமைந்துள்ள 40 அடி கிணற்றில் விழுந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த காசி மகள் ராஜேஸ்வரி வயது 29 உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இதுகுறித்து தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் ஜெயராணி மற்றும் சிறப்பு அலுவலர் குமார் தலைமையிலான மீட்புக்குழுவினர் பெண்ணை உயிருடன் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை முயற்சி செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
திருமங்கலம் அருகே 40 அடி கிணற்றில் விழுந்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.
எழுதியவர்: mohan November 15, 2021, 4:32 am




You must be logged in to post a comment.