18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரவுடி விஜய் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்ணின் உறவினர் புகார் அளித்துள்ளார்.

ரவுடி விஜய் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்ணின் உறவினர் புகார் அளித்துள்ளார்.

எழுதியவர்: mohan November 14, 2021, 6:25 am

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறை ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் ரவுடி குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளி கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.இதனையடுத்து சம்பவம் தொடர்பாக மீண்டும் அதே இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றபோது காவல் ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்றபோது ரவுடி குருவி விஜயின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கார்த்திக்கை விரட்டி பிடித்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த குருவி விஜய்யை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் ரவுடி குருவி விஜயை போலிசார் போலியான வழக்கில் கண் முன்பாக காவல்துறையினர் சுட்டதாகவும், தனது சகோதரர் குறித்த தகவலை அளிக்க மறுப்பதால் இது தொடர்பாக விசாரணை நடத்தகோரி விஜயின் சகோதரி லாவண்யா மாநில மனித உரிமை ஆணையத்திற்கு இ-மெயில் மூலமாக புகார் அளித்துள்ளார்.தொடர்ந்து ரவுடி விஜய்யின் சகோதரி லாவண்யா, தாய் கண்ணகி மற்றும் உறவினர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு தொடர்பாக புகார் அளிக்க வந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!