17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் குழுந்தைகள் தினவிழா

உசிலம்பட்டியில் குழுந்தைகள் தினவிழா

எழுதியவர்: mohan November 13, 2021, 4:28 pm

இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஓவியப்போட்டி மாறுவேடப்போட்டி பரதம் சிலம்பம் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி முடிவில் உதவித் தலைமையாசிரியர் பொன் ரமேஷ் நன்றி கூறினார்.கடந்த 19 மாதமாக கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதும் தற்போது பள்ளிகள் திறந்து குறுகிய காலமென்றாலும் பள்ளி மாணவர்கள் பலர் ஆர்வர்த்துடன் போட்டிகளில் பங்கேற்றது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!