17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே லாரியில் ரேஷன் அரிசியை கடத்தியதாக இருவர் கைது.

மதுரை அருகே லாரியில் ரேஷன் அரிசியை கடத்தியதாக இருவர் கைது.

எழுதியவர்: mohan November 13, 2021, 6:52 am

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதுமதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம் சக்கிமங்கலம் ரைஸ் மில் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட தனிப்பிரிவு போலீசாருடன் தீவிர ரோந்து பணி செய்து வாகன சோதனையில் ஈடுபடும்போது, சட்டத்திற்குப் புறம்பாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற அருண்பாண்டி (31) முத்துப்பாண்டி(35) ஆகியோரை கைது செய்து செய்தனர். மேலும், இது சம்பந்தமாக எதிரி யிடமிருந்து ரேஷன் அரிசி சுமார் 46 டன் ரேஷன் அரிசி மற்றும் நான்கு சக்கர வாகனம் (லாரி) முன்று சக்கர (ஆட் டோ) வாகனம், இரண்டு சக்கர வாகனம் (பைக்) ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ,வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் எதிரிகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு குழுவிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல் பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே. பாஸ்கரன் எச்சரித்து உள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!