வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரப்படி மாநகராட்சி ஆணையர் வழிகாட்டுதலுடன் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை பணியை செய்யவேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சியை சேர்ந்த 100 தூய்மை பணியாளர்கள் நேற்று 12-ம் தேதி வேலூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் கையுறை, ரெயின்கோட்,, முககவசம், கொடுக்கப்பட்டது.இவர்களுடன் 4 சுகாதார மேற்பார்வையாளர்களும் சென்று உள்ளனர். இவர்களுக்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஒதுக்கி தரும் இடங்களில் தூய்மை பணி மேற்கொள்வார். இவர்களை சுகாதார அலுவலர் சிவக்குமார் வழிநடத்தி செல்வார்.
சென்னையில் தூய்மை பணியை மேற்கொள்ள வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் 100 தூய்மை பணியாளர்கள் பயணம்.
எழுதியவர்: mohan November 13, 2021, 6:37 am




You must be logged in to post a comment.