திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு, நகரின் முக்கிய பிரமுகர்களிடம், வெள்ளி உண்டியல் வைத்து, காணிக்கை வசூல் செய்யப்படுவது வழக்கம். தற்போது, கோவில் வருமானம் பல மடங்கு பெருகினாலும், பாரம்பரியம் மாறாமல் இருக்க, காணிக்கை உண்டியல் வைக்கும் நடைமுறை, இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளி உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு, வெள்ளி காணிக்கை உண்டியலில் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து, அண்ணாமலையாருக்கு, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. மூன்றாம் நாள் விழாவையொட்டி, விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு 1,008 சங்காபிஷேகம்.
எழுதியவர்: mohan November 13, 2021, 6:29 am




You must be logged in to post a comment.