17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்தம் அருகே அனாதையாக சுற்றிதிரிந்த மனநல பாதித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த தமுமுகவினர்.

குடியாத்தம் அருகே அனாதையாக சுற்றிதிரிந்த மனநல பாதித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த தமுமுகவினர்.

எழுதியவர்: mohan November 12, 2021, 3:01 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதி சாலையோரததில் மனநலம் பாதித்த பெண் ஒருவர் மழை, குளிரால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்த தகவல் குடியாத்தம் தமுமுக ஒன்றியதலைவர் சகாபுதினுக்கு கிடைத்தது.அந்த மனநலம் பாதித்த பெண் முதாட்டிக்கு மாற்று உடை அணிவித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அரசு மருத்துவர்கள் அறிவுரைப்படி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவில் தங்களது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக இலவச ஆம்புலன்ஸ் வண்டிமூலம் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.உடன் தமுமுக நிர்வாகிகள் இருந்தனர். குடியாத்தம் தாலுகா வருவாய்துறையினரும் உதவி செய்தனர்.

கே.எம்.வாரியார்

வேலூர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!