17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அடிப்படை வசதிக்காக 40 வருடங்களாக ஏங்கித் தவிக்கும் கிராம மக்கள்..கண்டுகொள்ளாத ஊராட்சி ஒன்றியம்.

அடிப்படை வசதிக்காக 40 வருடங்களாக ஏங்கித் தவிக்கும் கிராம மக்கள்..கண்டுகொள்ளாத ஊராட்சி ஒன்றியம்.

எழுதியவர்: mohan November 12, 2021, 2:50 pm

நம்நாடு சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டைக் கடந்த போதும் சாக்கடை குடிநீர் என அடிப்படை வசதிக்கே ஏங்கித்தவிக்கும் கிராமங்களும் இன்றும் இந்தியாவில் உள்ளன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பஞ்சாயத்தைச் சார்ந்தது கொடிக்குளம் கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராமத்தின் அனைத்து பகுதியில் உள்ள சாலைகளும் செம்மண் ரோட்டில் அமைந்துள்ளது. முறையாக சாக்கடை வசதி கட்டமைக்கப்படாததால் தெருவில் தண்ணீர் செல்ல வழியின்றி சாலையிலேயே சாக்கடை நீர் தேங்கி நிற்கின்றது.மேலும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.இதனால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தண்ணீரில் கொசு உற்பத்தியாகதாகவும் இத்தெருவில் குழந்தைகள் இறங்கி நடப்பனதால் பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளதாகவும் இக்கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.மேலும் இக்கிராமத்தில் தெருக்களில் மின் விளக்கு வசதி செய்து தரப்படவில்லை.இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் மக்கள் நடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.இக்கிராமத்தில் சாக்கடை வசதி தெரு மின்விளக்கு சாலை வசதி உள்பட எந்த அடிப்படை வசதிகளும் கடந்த 40 வருடங்களாக செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அரசியல்வாதிகள் ஓட்டுக் கேட்க கிராமத்திற்குள் வருவதோடு சரிஅதன் பின் இப்பக்கமே எட்டிப் பார்ப்பரில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனுக்கொடுத்தும் எவ்வித பதிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சகதியாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்;டத்தில் ஈடுபட்;டனர்.இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.அடிப்படை வசதிக்காக ஏங்கித்தவிக்கும் இக்கிராம மக்களின் அழுகுரல் அரசின் காதில் விழுமா.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!