திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி பகுதியில் ஏரி நிரம்பி கோடி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர் பெரியகோளாப்பாடி ஊராட்சிக்குட்பட்ட ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றனர் இந்த நீர் தேக்கத்தில் இருந்து வாய்க்கால் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டு அருகாமையில் உள்ள அஸ்வநாகசுரணை ஏரி, அய்யங்குளம் ஏரி, பெரும்பாக்கம் ஏரி வாய்க்கால் வழியாக வெளியேறி செல்கின்றது. இதனிடையே 20 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய கோளாபாடி ஏரி நிரம்பி நிரம்பியதை அடுத்து கிராம பொதுமக்கள் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . ஏரியின் கோடி நீரை வரவேற்கும் விதமாக ஊராட்சி மன்றத்தலைவர் ஆத்தங்கரையாள் ஜெயராமன் தலைமையில் பூஜை செய்து நீரில் மலர்தூவி சேலையை கோடி விட்டனர். கிராம பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
செங்கம் அருகே 20 வருடத்திற்கு பிறகு தண்ணீரைப் பார்த்த பெரியகோளப்பாடி ஏரி .
எழுதியவர்: mohan November 12, 2021, 2:39 pm




You must be logged in to post a comment.