18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செயின் பறிப்பு திருடனை மடக்கிப் பிடித்த போலீசார்.

செயின் பறிப்பு திருடனை மடக்கிப் பிடித்த போலீசார்.

எழுதியவர்: mohan November 12, 2021, 12:19 pm

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெண்ணிடம் நகையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து மதுரை வழியாக வருவதாக விருதுநகர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, மதுரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின்படி, மதுரை மாவட்ட திருமங்கலம் போலீசாருக்கு துரிதமாக திருடனை மடக்கிப் பிடிக்க தகவல் கூறப்பட்டது..தகவலின் பேரில் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் திருமங்கலம் அனைத்து சந்திப்பு சாலைகளிலும் போலீசார் வாகன தணிக்கை செய்து, கொண்டிருந்தபோது, திருமங்கலம் கப்பலூர் அருகே சார்பு ஆய்வாளர், மாரிகண்ணன் மற்றும் தலைமை காவலர் .கண்ணன், ஆகிய இருவரும் தப்பிச்சென்ற செயின் பறிப்பு திருடனை விரட்டிச் சென்று கப்பலூர் கண்மாயில் வைத்து மடக்கிப் பிடித்து திருடுபோன நகைகளை மீட்டனர். தகவலை அறிந்து துரிதமாக செயல்பட்ட திருமங்கலம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாஸ்கரன் , சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, திருமங்கலம் போலீசாரை பாராட்டினார்கள். மேலும் இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!