18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் மாநில சிறுபான்மை ஆணைய கலந்தாய்வு கூட்டம்; மமக தமுமுக சார்பில் முக்கிய கோரிக்கை..

நெல்லையில் மாநில சிறுபான்மை ஆணைய கலந்தாய்வு கூட்டம்; மமக தமுமுக சார்பில் முக்கிய கோரிக்கை..

எழுதியவர்: mohan November 10, 2021, 10:29 am

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர்களுக்கு செயல்படுத்திவரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், கோரிக்கைகள் கேட்டும் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ நடைபெற்றது. சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு கோரிக்கைகளை அனைவரிடமும் பெற்றார், சிறுபான்மையினர் ஆணையம் செய்திடும் பணிகளை குறித்து விளக்கி பேசினார். சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று பேசினார்கள். இதில் தமுமுக மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் பேசும் போது மாநகராட்சி வார்டு மறு வரையறையில் மேலப்பாளையம் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டது குறித்தும் அதை சரி செய்ய வேண்டும், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறைவாசிகள் விடுதலை செய்யப்படும் போது 38 முஸ்லிம் சிறைவாசிகளை பாரபட்சம் இல்லாமல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதி மன்றத்தால் வழக்கு முடிக்கப்பட்ட அனைவருக்கும் பாஸ்போர்ட் வழங்க காவல் துறை பரிந்துரை செய்ய வேண்டும், ஸ்காலர்ஷிப் விண்ணப்பம் செய்யும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். மேலும் அடக்கஸ்தலத்திற்கு சுற்றுச்சுவர் ‌அமைத்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக ஆணைய தலைவரிடம் தமுமுக மமக சார்பில் வழங்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!