17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » அம்மா திட்ட முகாம்- பயனாளிகள் மகிழ்ச்சி..

அம்மா திட்ட முகாம்- பயனாளிகள் மகிழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2017, 5:15 pm

கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை தாசில்தார் (பொ) திரு கணேசன் வட்ட வழங்கல் அலுவலர்  திரு கே எம் தமிம்ராஜா மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது

இம்முகாமில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகளும், குடும்பஅட்டையில் பெயர்சேர்த்தல் பெயர்நீக்கம்,பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 69 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

இம்முகாமில்  திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் திருமதி கோகிலா, கிராம நிர்வாக அலுவலரகள் திரு முனிஸ்வரன், பூபதி, முன்னாள் ஊராட்சித்தலைவர் திரு உத்தண்டவேலு கிராமத்தலைவர் திரு முனியாண்டி உட்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!