17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.

எழுதியவர்: mohan November 8, 2021, 12:56 pm

எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், தலைமையில் நடைபெற்றது. அமைப்பு செயலாளர் பகுர்தீன், வரவேற்புரை நிகழ்த்தினார்.பொதுச் செயலாளர் ஜியாவுதீன் பழைய புதிய தீர்மானங்களை வாசித்தார்சிறப்பு அழைப்பாளராகமாநில செயலாளர் நஜ்மா பேகம் செயற்குழுவில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.இறுதியாக துணை தலைவர் ஜாபர் சுல்தான் நன்றியுரை நிகழ்த்தினார்..கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனவருகின்ற மாநகராட்சி தேர்தலில் முதற் கட்டமாக மதுரை 39வது வார்டு கோரிப்பாளையம்,31வது வார்டு யாகப்பநகர், போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் செல்லூர், புதூர், பொறியாளர் நகர், மேலூர் முகமதியாபுரம் 20&22 ஆகிய பகுதிகளில் போட்டியிட மாநில தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது.வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக இம்தியாஸ் அகமது தேர்வு செய்யப்பட்டார்.தொண்டர் அணி தலைவராக வாகைகுளம் ஒலியுல்லாஹ் தேர்வு செய்யப்பட்டார்.மருத்துவ அணி தலைவராக செல்லூர் ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.சமூக ஊடக அணி தலைவராக மேலூர் ரபீக், செயலாளராக புரோஸ் கான், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்வேளாண் விவசாயிகள் அணி தலைவராக.மேலூர் சையது செயலாளராக சக்கரை அத்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கட்சியின் வளர்ச்சி நிதி சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!