18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையின் பெருமையும், பாண்டிய நாட்டு சின்னமான மீன் சிலைகள் ரயில்வே நிலையம் முன் மீண்டும் நிறுவ ஏற்பாடு.

மதுரையின் பெருமையும், பாண்டிய நாட்டு சின்னமான மீன் சிலைகள் ரயில்வே நிலையம் முன் மீண்டும் நிறுவ ஏற்பாடு.

எழுதியவர்: mohan November 7, 2021, 10:09 am

மதுரையின் பாரம்பரிய அடையாளமான பாண்டிய நாட்டின் சின்னத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மூன்று மீன்கள் நீரூற்றின் துள்ளி விளையாடுவது போன்ற பித்தளை சிலைகளை மதுரை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டிருந்தை,கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணியின் போது மாநகர பேருந்துகள் நிலையத்திற்கு உள்ளே வருவதற்கு சிரமம் ஏற்பட்டதாக கூறி அந்த மீன் சிலைகள் அகற்றப்பட்டது.இந்த நிலையில் தற்போது பாரம்பரியதை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் மீண்டும் பித்தளையிலான மீன் சிலைகளை நிறுவ ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டதையடுத்து ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் 4 புறமும் வண்ண நிறங்களில் நீரூற்று அமைத்து அதில் மீண்டும் பாரம்பரியமிக்க மீன் சிலை நிறுவப்பட உள்ளது.அதற்கான பூமி பூஜை இன்று மதுரை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதில் மதுரை பாராளமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!