17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 5 கோடி வரை மோசடி,2 பேர் கைது.

வேலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 5 கோடி வரை மோசடி,2 பேர் கைது.

எழுதியவர்: mohan November 6, 2021, 2:55 pm

வேலூர் அடுத்த விருபாட்சிபுரத்தை சேர்ந்த யுவநாதன் (27) பட்டாதாரியான இவர் வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.அதில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த தச்சன்பட்டறையை சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் தங்கராஜ்(70) பெருவளையம் ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (44) மற்றும் சதீஷ. (31) ஆகியோரிடம் அரசு வேலை வேண்டி கடந்த 2019 -ல் ரூ 5 லட்சம் கொடுத்தேன். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை.இவர்கள் சுமார் 100 பேர்களிடம் சுமார் ரூ 5 கோடி வரை பெற்று இதுவரை வேலை வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்து உள்ளனர்.இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.எஸ்.பி.செல்வக்குமார் உத்தரவுப்படி விசாரணை செய்து தங்கராஜ், சதீஸ், ஆகியோரை கைது செய்தனர்.தப்பி ஓடிய பஞ்சாயத்து தலைவர் குமரேசனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!