18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கழிவுநீர் சாலையில் தேங்கி இருப்பதால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீர் சாலை மறியல்.

கழிவுநீர் சாலையில் தேங்கி இருப்பதால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீர் சாலை மறியல்.

எழுதியவர்: mohan November 6, 2021, 2:33 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசரடி பகுதியில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், இப்பகுதியில் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதுமாக கழிவு நீர் தேங்கி வந்துள்ளது, மேலும் கடந்த சில தினங்களாக மதுரை மாநகரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாலை முழுவதும் மழைநீர் தேங்கி இருப்பதாகவும், தொடர்ந்து பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் மழை நீருடன் கலந்து துர்நாற்றம் வீசி வருவதாகவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்து வருவதால் குழந்தைகள் வெளியில் செல்லவிடாமல் வீட்டு சிறையில் இருப்பது போன்று தஞ்சமடைந்து இருப்பதாகவும், இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் திடீரென அரசரடியில் இருந்து காளவாசல் பைபாஸ் செல்லும் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!