விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 34 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழா பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் தயார் செய்து விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக திருவிழா போல் இலவசத் திருமணங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கிவந்தனர்விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம் .இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு தடை விதித்த நிலையில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து. நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை 293வது மதுரை ஆதினம் ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிய பிரம்மாச்சாரி சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலையில் கரைக்கப்பட்டது .விநாயகர் சிலை மொத்தமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி அளிக்காததை அடுத்து போலீசாருக்கும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலையில் கரைக்கப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது..
விநாயகர் சதூர்த்திக்காக செய்ய பட்ட விநாயகர் சிலைகள் நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று மதுரை ஆதீனம் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
எழுதியவர்: mohan November 3, 2021, 6:58 am




You must be logged in to post a comment.