18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு; சட்டமன்ற உறுப்பினர் .

செங்கம் அருகே பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு; சட்டமன்ற உறுப்பினர் .

எழுதியவர்: mohan November 2, 2021, 5:15 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.கரோனா பெருந்தொற்று காரணமாக 600 நாட்களுக்கு பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1 திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. தண்டராம்பட்டு ஒன்றிய குழுத்தலைவர் பரிமளா கலையரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்இதேபோல் மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஏதுவாக, ஆசிரியர்கள் கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதோடு, விளையாட்டு ஆகியவை மாணவர்களை விரும்பி ஈர்க்கும் வண்ணம் உள்ளது.இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் மன இறுக்கத்தை குறைத்து மகிழ்ச்சியோடு கல்வி கற்கும் வகையில், ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கி தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் அறிவுறுத்தியுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி அலமேலு கிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு, மகேஸ்வரி, ஆறுமுகம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!