17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளிக்கு திரும்பிய மாணவ மாணவிகளை பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்ற ஊராட்சி மன்ற தலைவர்.

பள்ளிக்கு திரும்பிய மாணவ மாணவிகளை பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்ற ஊராட்சி மன்ற தலைவர்.

எழுதியவர்: mohan November 1, 2021, 6:41 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ளமேலவரகுணராம புரம் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தமிழக முதல்வரின் சீறிய முயற்சியினால் பள்ளிகள் இன்று திறந்த நிலையில் பள்ளிக்கு வரும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளை இராஜபாளையம் ஊராட்சி மன்ற பெருந்தலைவர் சிங்கராஜ் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார் இரண்டு ஆண்டுகளின் பின்பு பள்ளிக்கு திரும்பும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக கை கழுவி முக கவசம் அணிந்து வெப்ப பரிசோதனை செய்து பள்ளிக்கு ஆசிரியர்கள் அனுமதித்தனர் மேலும் சமூக இடைவெளியை பின்பற்றவும் சுத்தமாக இருக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!