17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் November 1, 2021, 12:25 am

கீழக்கரை மேற்க்கு நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து 31/10/2021 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில்  தொகுதி பொருளாளர் சகுபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார். கிழக்கு நகர் தலைவர் நூருல் ஜமான்,  துணை தலைவர் ஹாஜா அலாவுதீன், செயலாளர் பக்ருதீன், அசாருதீன் கிழக்குநகர் மற்றும் மேற்கு நகர் நிர்வாகிகள் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் செய்யது இப்ராஹிம்,  Nrc  டிவிஷன் பிரசிடென்ட் ஹமீது சாலிஹ் அவர்கள் முன்னிலை வகித்தனர்…

மேற்க்கு நகர் துணைத் தலைவர் முஹம்மது ஜலீல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.. மேற்கு நகர் செயலாளர் கீழைஅஸ்ரப் தொகுப்புரை வழங்கினார். தொகுதி துணை தலைவர் அஹமது நதீர் கண்டனகோசம் எழுப்பினார். துறைமுக தொகுதி தொகுதிஇணை செயலாளர் பக்ருத்தீன் அலி, எஸ்டிபிஐ கட்சியின் செயல் வீரர் ஜெகுபர் அலி ஆகியோர் விலை வாசி உயர்வை கண்டித்து பாடல்பாடினார். மேற்கு நகர்தலைவர்  ஹமீது பைசல் கருத்துரை வழங்கினார். மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அரூஸி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில் wim மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜாபீரா அவர்கள் மற்றும் நிர்வாகிகளும்,  இந்நிகழ்வில் Pfi_Sdpi_Sdtu நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியாக கிழக்கு நகர் பொருளாளர் தாஜுல் அமீன் அவர்கள்B நன்றியுரை ஆற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!