17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி செக்போஸ்டில் கைநீட்டிய சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்

காட்பாடி செக்போஸ்டில் கைநீட்டிய சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்

எழுதியவர்: mohan October 30, 2021, 12:48 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்தியான்பேட்டையில் காவல், வட்டார போக்குவரத்து, கலால், வனத்துறை ஆகியவற்றின் செக்போஸ்ட் இயங்கிவருகிறது. இது தமிழக-ஆந்திர எல்லையில் உள்ளது.நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த விஜய், 5 நெல் அறுவடை செய்யும் பெரிய வண்டிகளை எடுத்து கொண்டு ஆந்திரா சென்று உள்ளார்.அங்கு உள்ள ஆர்டிஓ செக்போஸ்டில் புரோக்கரிடம் வண்டி ஒன்றுக்கு ரூ 500 கொடுத்துவிட்டு ஆந்திர பகுதிக்கு செல்ல முயன்றார்.அப்போது காவல் பணியில் இருந்த காட்பாடி காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தனது டூவிலரில் சென்று விஜயை மடக்கி ஆர்டிஓ ஆபிசுக்கு மட்டும் ரூ 500 கொடுக்கறீங்க! எனக்கும் கொடு என்று கறார் காட்டி உள்ளார்.அதன்பிறகு௹ 300 கேட்ட பிரகரஷிக்கு ரூ 200 கிடைத்தது.இதை வீடியோவாக பதிவு செய்த விஜய் நேற்று சமூக வளைதளத்தில் பதிவிட அது வைரலானது.காவல்துறை விசாரணைக்கு பின்பு வேலூர் எஸ்.பி.செல்வக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.கடந்த ஆட்சியில் அதிமுக அமைச்சர் வீரமணியிடம், காவல் பாதுகாப்பு அலுவலராக இருந்த இந்த பிரகாஷ் காட்பாடியை சேர்ந்தார். கொழுத்த பணத்தில் அப்போது திரிந்த பிரகாஷ் காட்பாடி செக்போஸ்ட் பணிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.இப்போது எஸ்எஸ்ஐ பிரகாஷ்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!