17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தேவர் மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை.

மதுரையில் தேவர் மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை.

எழுதியவர்: mohan October 30, 2021, 9:54 am

 மதுரையில் தேவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, மற்றும் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல்வர் முக ஸ்டாலின் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மதுரையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கீழடியில் நடைபெற்றுவரும் ஆய்வு பணிகளை பார்வையிட்டார். அதன் பின் நேற்று மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த இன்று காலையில் கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பின் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பின் முதல்வர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக கிளம்பிச் சென்றார். அவருடன் அமைச்சர்கள், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, பெரியகருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் உடன் சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!