18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடுப்பூசி செலுத்துவதில் சாதனை புரிந்த முன்கள பணியாளர்களுக்கு சான்று வழங்கல்..

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை புரிந்த முன்கள பணியாளர்களுக்கு சான்று வழங்கல்..

எழுதியவர்: mohan October 30, 2021, 9:49 am

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை புரிந்த முன்களப் பணியாளர்கள் பாஜக சார்பில் சான்று வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் அரசின் சார்பில் 100 கோடி பேருக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி சாதனை புரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு சான்றுகள் பாஜக சார்பில் வழங்கப்பட்டது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்துவதில் சாதனை புரிந்த முன் களப்பணியாளர்களுக்கு சான்று வழங்கும் விழா மேலநீலிதநல்லூர் ஒன்றிய பாஜக சார்பில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு செயலாளர் கோகுலக் கண்ணன் தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய தலைவர் ராமபாண்டியன், பொதுச் செயலாளர் பரமசிவன், பொருளாளர் நந்தீஸ்வரன், துணைத் தலைவர் சீனிவாசகன், விவசாய அணி பொதுச் செயலாளர் வடிவேல் முருகையா, செயலாளர் குமார், இளைஞரணி தலைவர் பாக்யராஜ், ஒன்றிய ஐடி பிரிவு துணைத் தலைவர் நாகராஜன், திருமலாபுரம் முத்துக்குமார், வழக்கறிஞர் பிரிவு முருகேசன் தீபம் செந்தில்குமார் உட்பட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு மருத்துவர்கள் மதன் சுதாகர், பெரோஸ் கான் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!