17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்திரப்பட்டி சாலையிலுள்ள ரயில்வே மேம்பால பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு .

சத்திரப்பட்டி சாலையிலுள்ள ரயில்வே மேம்பால பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு .

எழுதியவர்: mohan October 30, 2021, 6:09 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை ரயில்வே கடவு எண் 449 மேம்பால பணிகள் துவங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது கடந்த ஆறு மாதங்களாக பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பணிகள் நடை பெற்று வருகிறது.மேலும் இந்த மேம்பால பணிகள் நடைபெறுவதால் பணிகளை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் வனத்துறை அதிகாரி குருசாமி. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் முரளி.முத்துமுனிகுமாரி மற்றும் ஒப்பந்ததாரகள் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆய்வுகள் செய்து சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் ஒரு கோயிலை அகற்ற சட்டமன்ற உறுப்பினர் உத்தரவிட்டு பணிகளை தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும் பள்ளிகள் திறந்தார் மாணவ மாணவிகள் வந்து செல்ல இடையூறாக இருப்பதால் பணிகளை விரைந்து முடித்து சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரியுடன் ஆலோசனை அளித்து அறிவுரைகளை வழங்கினார்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!