17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து ஐந்து கிலோ தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகாவினர்.

மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து ஐந்து கிலோ தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகாவினர்.

எழுதியவர்: mohan October 29, 2021, 10:51 am

கேரள மாநிலம் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த ஒருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் உள்பட இருவரிடம் விசாரணை.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.இதனையடுத்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது பயணிகளின் சூட்கேஸ்கேட்பாராற்று இருந்ததை எடுத்த சோதனை செய்தனர்இதில் 1 கிலோ எடையுள்ள 5 தங்க கட்டிகள் இருந்தது .இதன் மதிப்பு 2 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை கைப்பற்றி யாருடையது என்று விமானத்தில் வந்த பயணிகளிடம் விசாரணை செய்தபோது, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உள்பட இருவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!