17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் ஊழல் லஞ்சத்திற்கு எதிராக உறுதி மொழியேற்பு..

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் ஊழல் லஞ்சத்திற்கு எதிராக உறுதி மொழியேற்பு..

எழுதியவர்: mohan October 28, 2021, 4:41 pm

தென்காசி மாவட்ட காவல் துறையினர் சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஊழல் லஞ்சத்தை ஒழித்து நேர்மையுடன் செயல்படுவது குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டது.தென்காசி மாவட்டம், தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதேபோல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு,குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொது மக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகாரம் அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன். என்ற வாசகங்கள் கொண்ட உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!