17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதுப்பட்டியில்ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி. விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

புதுப்பட்டியில்ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி. விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan October 23, 2021, 6:44 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் புதுப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளதாகவும் விபத்து ஏற்படும் முன்பு இடித்து விட்டு புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த குடிநீர் தொட்டி ஆனதுசுமார் ஆறு ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் இருப்பதாகவும் அருகில் கோவில் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருப்பதாகவும் வெள்ளி செவ்வாய் போன்ற சுப நாளில் பொதுமக்கள் அதிக அளவில்கோவிலுக்கு வருகை தருகிறார்கள் .

அதனால் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் முன்பு இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக குடிநீர் தொட்டியை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் வாடிப்பட்டி யூனியன் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காரணமாக பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வாழ்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் ஆகையால் மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக அகற்றி விட்டு புதிதாக வேறு இடத்தில் குடிநீர் தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!