17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே நெல்கொள் முதல் செய்ய தாமதம்: வீணாகும் நெல்மணிகள்.

மதுரை அருகே நெல்கொள் முதல் செய்ய தாமதம்: வீணாகும் நெல்மணிகள்.

எழுதியவர்: mohan October 18, 2021, 6:09 am

மழையில் நனைந்து வீணாகும் நெல் குவியல்கள் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், உள்ள நெல் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாமல் உள்ளதால், மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .அரசு உத்தரவிட்டும், அதிகாரிகளின் மெத்தன போக்கால் கொள்முதல் செய்யப்படவில்லை எனவும் ,நெல் குவியல்களை பராமரிக்க தினந்தோறும் 10,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்வதாகவும் இதனால் ,மிகவும் வேதனை தருவதாக தெரிவிக்கின்றனர்.கடந்த மூன்று மாதங்களாக அறுவடை செய்த நெல், மழையில் நனைந்து வீணாவதால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .நெல் அறுவடை செய்து 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைத்து போயுள்ளதாக தெரிவிக்கின்றனர்,100 மூடை அளவுள்ள கொள்முதல் நிலையத்தில் 1,000 மூட்டைகளுக்கு மேல் உள்ளதால், அருகில் உள்ள வயல்களில் நெல் களை கொட்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் திமுகவைச் சேர்ந்த செல்வம் என்பவர் கூறும்போது:நெல் கொள்முதல் செய்யவில்லை என்று கிராம பொதுமக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு என்னிடம் வந்து தெரிவித்த போது, உடனே அதிகாரியைத் தொடர்பு கொண்டு கூறினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கட்சிக்காரர்களின் தூண்டுதலால், அதிகாரிகள் வர மறுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள். மேலும், வயல்களில் உள்ள நெல்லை கொள்முதல் செய்து குடோனுக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு பத்து நாட்களுக்கு பின்பு மறுபடியும் கொள்முதல் நிலையத்தில் வந்து அதிகாரிகள் கொட்டி விட்டுச் சென்றனர். ஆகையால், மழையில் நனைந்து நெல்கள் முளைத்து போயுள்ளதாகவும் இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றார்.கொள்முதல் நிலையங்களில் உள்ள மூடைகளை ஏற்றுவதற்கு ஆறு ரூபாயும் குடோனில் இருந்து வரும் வேலையாட்களுக்கு மூடைக்கு 13 ரூபாய் போக்குவரத்திற்காக வாடகையாக பத்தாயிரம் ரூபாயும் செலவு செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இதில், அரசு கவனம் செலுத்தி செலவுகளை குறைத்து விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்பட்டி யூனியன் தலைவர் ஆகியோரிடம் சென்று முறையிட்டும் ,நான் சொல்வதை கேட்க மறுப்பதாகவும் இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கி கிடைப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!