17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடையே காவல் துறையினர் விழிப்புணர்வு..

போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடையே காவல் துறையினர் விழிப்புணர்வு..

எழுதியவர்: mohan October 16, 2021, 10:36 am

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் பணியில் தென்காசி மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும்,போக்சோ சட்டம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினரால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனையிலுள்ள பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 181,1098 ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு காவல் துறையினரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் எனவும்,18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக செய்யப்படும் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தியடையாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவகிரி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!