18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ்.மங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நகர் அலுவலகம் திறக்கப்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நகர் அலுவலகம் திறக்கப்பட்டது.

எழுதியவர்: mohan October 11, 2021, 10:50 am

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருவாடானை வடக்கு தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நகர் அலுவலகம் 10.10. 2021 திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர் தலைவர் அபுபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார்.தொகுதி தலைவர் சலாமத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு கொடி ஏற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் முன்னிலையில் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஏராளமான இளைஞர்கள் எஸ்டிபிஐ கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னார்வமாக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்இக்கூட்டத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான்,மாவட்ட துணை தலைவர் சோமு,மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்டச் செயலாளர் அபுல்கலாம் ஆசாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது சுலைமான் மற்றும் அப்துல் ரஹ்மான், திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத், செயலாளர் முஹமது ரிஸ்வான் இராமநாதபுரம் கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா, இராமநாதபுரம் மேற்கு தொகுதி செயலாளர் அக்பர் அலி திருவாடனை தெற்கு தொகுதி தலைவர் முகம்மது ஹனீப், மாவட்ட சமூக ஊடக அணி செயலாளர் முஜாஹிதீன் தேவிப்பட்டினம் நகர் தலைவர் ஹாஜி அலி, சித்தார்கோட்டை நகர் தலைவர் கஜினி முஹம்மத், பெரியப்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புரோஸ்கான் அவர்கள் மேலும் திருவாடானை வடக்கு தொகுதி நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இறுதியாக ஆர்எஸ் மங்கலம் நகர் தலைவர் அபுபக்கர் சித்திக் நன்றி உரையாற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!