17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாபட்டியில் ரூ 23.5 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டடத்திற்கு பூமி பூஜை விழா.

பாப்பாபட்டியில் ரூ 23.5 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டடத்திற்கு பூமி பூஜை விழா.

எழுதியவர்: mohan October 9, 2021, 5:18 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது.பாப்பாபட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அணிஸ் சேகர் தலைமையில் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடத்திற்கு பூமி பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் ,திட்ட இயக்குனர் அனிதாஹனிப், ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்லத்துரை,  செல்லம்பட்டி கமிஷனர் கீதா, தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் கிராம பொதுமக்கள் அரசு அலுவலர்கள் இந்த பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டனர்.பின்னர் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!