17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் 8 ஆண்டுகளாக தேடிவந்த சிறுவனை கண்டுபிடித்து சகோதரர்களிடம் ஒப்படைத்த குழந்தைகள் நல குழுவினர்.

மதுரையில் 8 ஆண்டுகளாக தேடிவந்த சிறுவனை கண்டுபிடித்து சகோதரர்களிடம் ஒப்படைத்த குழந்தைகள் நல குழுவினர்.

எழுதியவர்: mohan October 9, 2021, 10:00 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் எட்டு ஆண்டுகளாக தேடி வரும் சிறுவன் விஜய் குறித்த புகார் அளித்தனர்.இதுகுறித்து. குழந்தை நல அலுவலர்கள் விசாரணை செய்ததில் சிறுவன் விஜய் மீட்கப்பட்டு சகோதரர்களிடம் ஒப்படைக்கப் பட்டார்திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் – பார்வதி தம்பதியினர் 4ஆண் குழந்தைகள், 2பெண் குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளனர்.ஜோசிய தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு தொழில் நிமித்தமாக மதுரைக்கு வந்து சாலையோரங்களில் தங்கியிருந்துள்ளனர்அப்போது மதுரை ரயில் நிலையம் அருகே சண்முகம் – பார்வதி தம்பதியினரின் கடைசி இரு குழந்தைகளான 7வயது நிரம்பிய பெண் குழந்தையும், இரண்டு வயது ஆண் குழந்தையும் தவற விட்ட நிலையில் உரிய தகவல் இல்லாத நிலையில் குழந்தைகள் இருவரையும் மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஆஜர்படுத்தி காப்பகத்தில் அடைத்தனர்.அந்த 2 குழந்தையின் மூத்த அண்ணனான குமார் என்பவரிடம் தங்களது உடன்பிறந்தவர்கள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்து குழந்தைகள் நல அலுவலர் சண்முகத்திடம் கூறியுள்ளார்.இதனையடுத்து குழந்தைகள் நல குழுவினர் மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் அவற்றில் தேடி அதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்து சிறுவனை மீட்டனர்.தற்போது மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மூலமாக பள்ளியில் 5ம் வகுப்பு படித்துவருவதும் தெரிய வந்தது.இதையடுத்து குமார் மூலம் சிறுவன் அடையாளம் காணப்பட்டு சகோதரர்களிடம் குழந்தைகள் நல அலுவலர்கள்பாண்டிராஜ் சண்முகம் ஆகியோர் ஒப்படைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!