17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் வேலைகிடைக்காத பட்டதாரி இளைஞன் விரக்தியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை.

மதுரையில் வேலைகிடைக்காத பட்டதாரி இளைஞன் விரக்தியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை.

எழுதியவர்: mohan October 9, 2021, 9:50 am

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் 4 தேதி அன்று அந்த குடியிருப்பில் வசித்து வந்த வெங்கட சுப்பிரமணியன் சுங்கத் துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி என்பவரது ஒரே மகனான கிருஷ்ணமூர்த்தி (வயது 33) எம்.இ பட்டதாரியான இவருக்கு உரிய வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே சற்று மன உளைச்சல் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்துள்ளாராம்.இந்த நிலையில் 4 தேதி மதியம் 12 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர்.அவர்தற்கொலைக்கான காரணம் குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில் மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட பதரவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!