17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு.

மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் அளிப்பு.

எழுதியவர்: mohan October 8, 2021, 10:15 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் (அல்பண்டசோல்) வழங்கப்பட்டன.மேல்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தேசிய குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வு பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமை வகித்தார்.செவிலியர்கள் கலைச்செல்வி பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணுப்பிள்ளை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் வேல்முருகன் வரவேற்றார்.இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகளை வழங்கி, தலைமையாசிரியர் ஜெயந்தி பேசியதாவது: குடல் புழு நீக்க மாத்திரைகளை சாப்பிடுவதால், ரத்தசோகை கட்டுப்படுத்தப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கற்றல் திறன், ஞாபக சக்தி மேம்படும். வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை போன்ற புழுக்கள் மூலம் ஏற்படும் தொற்றுகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் தீர்வாக அமையும் என்றார். நிகழ்வின்போது பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு , மகேஸ்வரி ஆறுமுகம், ராஜா, மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!