17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திடீர் ஆய்வு .

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திடீர் ஆய்வு .

எழுதியவர்: mohan October 7, 2021, 4:31 pm

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட -38 ஊராட்சிகளுக்கு கடந்த 2020 – 2021-கானா மகாத்மா தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் பரிந்துரையின் பேரில் 10 கோடியே 68 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 97 சதவீத பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் திருப்பரங்குன்றம் ஊராட்சிகளில் மகாத்மா தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்துவருகிறது .இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர். ராஜன் செல்லப்பா இன்று திடீரென்று பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் ஆணையாளர் உதயகுமார்,பிரேமராஜன் ஒன்றிய பொறியாளர் சோலைமலை வசந்தி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதில் எந்த எந்த பணிகள் முடிவடைந்துள்ளது. எந்தபணிகள் நடந்து வருகிறது என்றுகேட்டறிந்தார்.மேலும் அவர் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளை முடுக்கிவிட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றுகேட்டுக்கொண்டார்.மேலும் அவர் நடப்பு ஆண்டிற்கான நிதியை அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதி செய்து தரவேண்டும்.அதற்காக தானும் உடன் இருப்பேன் என்றார்.ஆய்வில் , திருப்பரங்குன்றம் நிலையூர் ஒன்றிய கவுன்சில்ர் முருகன்,மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!