17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகளீர் தையல் கூட்டுறவு சங்கங்களில் கூலியை உயர்த்தி வழங்கக் கோரிஆர்ப்பாட்டம்.

மகளீர் தையல் கூட்டுறவு சங்கங்களில் கூலியை உயர்த்தி வழங்கக் கோரிஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan October 7, 2021, 7:07 am

மதுரை மற்றும், மதுரை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில், மகளிர் தையல் கூட்டுறவு தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ,சித்ரா தலைமையில், நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு சமூக நலத்துறையின் கீழ் மகளிர் தையல் கூட்டுறவு மூலம் துணிகளை பெற்றுக் கொண்டு,பெண் தையல் உறுப்பினர்கள் கூலிக்கு தைத்து கொடுத்து வருகிறார்கள்.‌அந்த கூலி மிகவும் குறைவாக உள்ளது என்றும், கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்‌ மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , சித்ரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப் போராட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,ஆர். தெய்வராஜ் ,பொன்ராஜ், எஸ்.சந்தியாகு,கெளரி மற்றும் பலர் பேசினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!