17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரக உள்ளாட்சி தேர்தல் காட்பாடி பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து ஓட்டுப் பதிவு .

ஊரக உள்ளாட்சி தேர்தல் காட்பாடி பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து ஓட்டுப் பதிவு .

எழுதியவர்: mohan October 7, 2021, 6:36 am

தமிழகத்தில் நேற்று 9 மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்குபதிவு நடந்தது.வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஒன்றியத்தில் நேற்று முதற்கட்ட வாக்குபதிவு நடந்தது.காட்பாடி ஒன்றியம் பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவருக்கான வாக்குபதிவு நடந்தது. இதில் ராதாகிருஷ்ணன், குணவேலன் இடையே கடும் போட்டி நிலவியது. காலையில் மந்தமாக துவங்கிய வாக்குபதிவு பின்பு விறுவிறுப்படைந்தது.காலையில் நடந்த வாக்குபதிவை வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயராஜ் ஆய்வு செய்தார்.காட்பாடி ஒன்றியத்தில் 40கிராம பஞ்சாயத்து தலைவர், 21 ஒன்றிய கவுன்சிலர், 2மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குபதிவு நடந்தது.அம்முண்டி கிராம பஞ்சாயத்து தேர்தலை அந்த கிராம மக்கள் புறக்கணித்தனர். பட்டியல் இன பெண்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கியதைகண்டித்து இந்த புறக்கணிப்பு நடந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!