18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்த இரண்டு பைக்குகள் திருட்டு

வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்த இரண்டு பைக்குகள் திருட்டு

எழுதியவர்: mohan October 6, 2021, 10:04 am

திருப்பரங்குன்றம் நிலையூர் ரோடு மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 32. இவருக்கு சொந்தமான ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வீட்டு வாசல் முன்பாக நிறுத்தி இருந்தார்.அங்கு நிறுத்தியிருந்த பைக்கை மர்ம ஆசாமி திருடிச் சென்று விட்டார். இந்த திருட்டு தொடர்பாக பாண்டியராஜன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.மற்றொரு திருட்டு ஆனையூர் கணபதி நகர் முதல் தெரு சேர்ந்தவர் கலையரசன் 26. இவருக்கு சொந்தமான ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வீட்டு வாசல் முன்பாக நிறுத்தி இருந்தார். இந்த பைக்கையும் மர்ம ஆசாமி திருடிச் சென்றுவிட்டார். இந்த திருட்டு தொடர்பாக கலையரசன் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!