17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஓட வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஓட வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan October 6, 2021, 9:29 am

ஆர்எஸ்.மங்கலம் அலிகார்சாலை குட்லு நகர் அருகில் உள்ள பாலம் புதிதாக அமைக்கப்பட்டது.அப்பொழுது அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி விடுகிறது.மழை காலத்தில் மழை நீர் வழிந்தோட வழி இல்லாமல் தண்ணீர் அனைத்தும் நடை பாதையிலேயே தேங்கி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.மேலும் கண்ணா பெட்டிக்கடை எதிரில் காவிரி குடிநீரை சரிபார்ப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாகவே மூடப்படாமல் உள்ளது.தற்போது அப்பள்ளம் மழை நீரால் நிரம்பி உள்ளது.சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் கவனக்குறைவாக குழியில் விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே தாங்கள் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்கும் மேலும் புதிதாக அமைக்கப்பட்ட தூம்பு பகுதியில் அடைபட்ட பகுதியை சரிசெய்து கழிவு நீர் செல்வதற்கும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!