மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்தவர் போஸ் மகன் பால்பாண்டி (40). இவர் தன் நண்பர்களான இதே ஊரைச்
சேர்ந்த மாயாண்டி மகன் பிரபு (40) பெரியகருப்பண் மகன் அலெக்ஸ்(38) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வெள்ளைமலைப்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு சென்றுள்ளனர்.அப்பொழுது உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு சென்ற டிப்பர் லாரியின் பின்னால் அந்த ஊர் வேகத்தடை அருகே எதிhபாரதவிதமாக மோதியதில் மூவரும் நிலை தடுமாறி விழுந்தனர்.இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணை கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமணை கொண்டு செல்லப்பட்டனர்..இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.பால்பாண்டி உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்
உசிலம்பட்டி அருகே லாரியின் பின்னால் இருசக்கரவாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்..
எழுதியவர்: mohan October 5, 2021, 6:01 pm




You must be logged in to post a comment.