17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு போட்டிகள்; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு போட்டிகள்; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

எழுதியவர்: mohan October 5, 2021, 10:20 am

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாறுவேடப்போட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு போட்டிகள் நடைபெற்றது. அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி துவக்கி வைத்த இந்த சிறப்பு போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நெல்லை அரசு அருங்காட்சியகமும், அரிமா சங்கமும் இணைந்து மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப் போட்டி, மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை வாசகம் சொல்லும் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி துவக்கி வைத்தார். போட்டியின் நடுவர்களாக பொதிகை தமிழ் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா, கலை ஆசிரியை சொர்ணம் மற்றும் ஓவிய ஆசிரியர் இசக்கியப்பன் ஆகியோர் இருந்தனர். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும் என காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!