18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலுப்பகுளத்தில் காந்தி ஜெயந்தி –மரக்கன்றுகள் நடும் விழா .

இலுப்பகுளத்தில் காந்தி ஜெயந்தி –மரக்கன்றுகள் நடும் விழா .

எழுதியவர்: mohan October 3, 2021, 3:02 pm

காரியாபட்டி அருகே இலுப்பகுளத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய ஊரக வளர்ச்சி துறையின் தூயமை பாரதம் திட்டம் – மற்றும் விருதுநகர் மாவட்ட பசுமை பாரத அறக்கட்டளை சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இலுப்பகுளத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இலுப்பகுளம் சோணையா கோவில் வளாகம், சமுதாயக்கூடம் கண்மாய்கரை ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நட்டுவைக்கப் பட்டது. நிகழ்ச்சியில் கிராம பிரமுகர் பெரியசாமி. விவேகா கானந்தா சேவாலய செயலாளர் ஞானசுந்தரம், ஆன்மீக பிரிவு நிர்வாகி தர்மராஜ் ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில்குமார் சமுக ஆர்வலர்கள் ஜெயக்குமார், ஜெய்சங்கர். ராஜேந்திரன பணித்தள பொறுப்பாளர் செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!