18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் போலீஸ் சிறுவர் அரங்கம் (பாய்ஸ் கிளப்) அமைக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார் ஆய்வு!

நிலக்கோட்டையில் போலீஸ் சிறுவர் அரங்கம் (பாய்ஸ் கிளப்) அமைக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார் ஆய்வு!

எழுதியவர்: mohan October 3, 2021, 2:44 pm

நிலக்கோட்டை காவல்நிலையம் சார்பாக சிறுவர் அரங்கம் (பாய்ஸ் கிளப்) நிலக்கோட்டை காவலர் குடியிருப்பின் ஒரு பகுதியில் நடைப்பெற்று வந்தது இந்த பாய்ஸ் கிளப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் வேறு சில செயல்களும் நடைபெற்று வந்தன.ஆனால் தற்போது இந்த காவலர் குடியிருப்பு முழுவதும் பராமரிப்பு இல்லாமலும் பாழடைந்த நிலையிலும் கட்டிடங்கள் இடிந்து போய் மரம் செடி கொடிகள் முளைத்து கிடப்பதாலும் பாய்ஸ் கிளப் செயலற்று பூட்டியே கிடக்கின்றன

.இதனை அறிந்த நிலக்கோட்டைக்கு பதியதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார் அவர்கள் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் பாய்ஸ் கிளப்பை ஆய்வு செய்து இந்த பகுதி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்படி பாய்ஸ் கிளப்பை ஆனந்த் நகர் பூங்காவில் அமைக்கலாம் என முன்னாள் கவுன்சிலர் ஜோசப் இடத்தில் ஆலோசனை நடத்திய பிறகு நிலக்கோட்டை செயல் அலுவலர் செல்வதாஸ் அவர்களை சந்தித்து இதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் ஆனந்த் நகர் பூங்காவில் பாய்ஸ் கிளப் அமைக்க ஏற்பாடுகள் செய்து தருகிறேன் என்றும் உறுதி கூறினார்.இந்நிகழ்வில் நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார்,தலைமையில் பயிற்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் லஷ்மிப பிரியா, காவல் ஆய்வாளர் குரு வெங்கட் ராஜ், சார்பு ஆய்வாளர் மயில்ராஜ், இந்தப் பகுயின் முன்னாள் கவுன்சிலர் ஜோசப், மற்றும் போலீஸ் பாய்ஸ் கிளப்பின் பயிற்சியாளர்கள் முத்துராஜ், ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!