18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை கோரிய வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.

9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை கோரிய வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.

எழுதியவர்: mohan October 1, 2021, 6:32 am

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை கோரிய வழக்கு மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், “தமிழ்நாடு அரசு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்றின் 3-வது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுகிறது. தற்போது இருக்கும் குழந்தைகளே நாளைய தூண்களாக இருக்கக் கூடியவர்கள்.சில பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என கூறுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவது இல்லை. சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் சரியாக மாணவர்கள் கற்பித்தல் இல்லை என்று கருதி நேரடி வகுப்பிற்கு அனுப்புகின்றனர் இதன் மூலம் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்வதால் சமூக இடைவேளை பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி செல்ல தடை விதிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்திரவிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!