17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழையனூர் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

பழையனூர் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

எழுதியவர்: mohan October 1, 2021, 6:23 am

திருவண்ணாமலை அடுத்த பழையனூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின் படி பள்ளிகளில் கட்டுரை போட்டி, நடனப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடைபெற்றது. பள்ளி அளவில் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களை தெரிவு செய்து ,பின் மாவட்ட அளவில் நடனப்போட்டியில் சுற்றுலா துறையின் மூலம் மூன்றாம் இடத்தை பிடித்த அ.மே.நி.பள்ளி, பழையனூர், மாணவி மேகலா, பத்தாம் வகுப்பு , மாவட்ட ஆட்சியர் முருகேஷ் சான்றிதழ், மற்றும் பரிசு தந்து பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திரு.வேத பிரகாசம்,பள்ளி துணை ஆய்வாளர் திரு.குமார்,பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர், பிற பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆ.கலைவாணி, நவநீதன், ஆசிரியர்கள் ஆகியோர் போட்டிகளை வைத்த தேர்வு செய்தனர். பிரமானந்தன், தலைமையாசிரியர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பரிசு பெற்ற மாணவியை பாராட்டினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!