18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது; சேர்ந்தமரம் காவல் துறை அதிரடி..

மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது; சேர்ந்தமரம் காவல் துறை அதிரடி..

எழுதியவர்: mohan September 30, 2021, 5:20 pm

மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்களை சேர்ந்தமரம் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.மேலும் 960 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வென்றிலிங்கபுரம் அய்யனார் கோவில் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்த சார்பு ஆய்வாளர் வேல் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த புதுகிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்கையா என்பவரின் மகன் அண்ணாதுரை (42) மற்றும் வேட்டரம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த போத்திக்கண்ணு என்பவரின் மகன் பாண்டியராஜா(31) ஆகிய இரண்டு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 960 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!